Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரயில்களில் அங்கீகாரமற்ற சுவரொட்டிகள், பதாகைகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை: ரயில்வே எச்சரிக்கை

சென்னை: சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை: சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலைய வளாகங்கள், நடைமேடைகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், சுவர்கள், ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்களின் உட்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்கீகாரமற்ற சுவரொட்டிகள், பதாகைகள், ஸ்டிக்கர்கள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு வருவது கவனிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற சுவரொட்டிகள்/அறிவிப்புகளை ஒட்டுவது பொதுச் சொத்துகளைச் சிதைப்பது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களின் ஒட்டுமொத்த தூய்மையையும், அழகையும் பாதிக்கிறது. ரயில்வே சட்டம், 1989-ன் படி, ரயில்வே சொத்துகளை எந்த விதத்தில் சேதப்படுத்தினாலும் அல்லது சிதைத்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்.

* ரயில்வே சட்டத்தின் பிரிவு 166-ன் கீழ், ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்

* வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே எல்லைக்குள் அங்கீகாரமற்ற அறிவிப்புகள்/சுவரொட்டிகளை ஒட்டுவதையோ அல்லது காட்சிப்படுத்துவதையோ தவிர்க்குமாறு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.