ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம்!
டெல்லி: ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ரயில் பயணிகள் எந்தவித கட்டணமும் இன்றி தங்கள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம். இருப்பில் உள்ள டிக்கெட்டுகளின் அடிப்படையில் மாற்றப்படும் பயண தேதி உறுதிசெய்யப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.