அமராவதி: மோன்தா புயல் காரணமாக ஆந்திராவின் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் காரணமாக விசாகப்பட்டினம், விஜயவாடா மார்க்கத்தில் 150க்கும் மேற்பட்ட ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் 116 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகள் டிக்கெட் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். புயல், மழையால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டால் உணவு, குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
