உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அமச்சார் கோயில் தெருவில் வசிப்பவர் நடராஜன். இவரது மகன் சதீஷ்குமார் (16). 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நண்பர்களுடன் பைக்கில் உளுந்தூர்பேட்டை நகர் ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கு நின்றிருந்த டேங்கர் ரயில் மீது ஏறி சதீஷ்குமார் செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது அவரது கை உயர் மின்னழுத்த மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.
+
Advertisement 
 
  
  
  
   
