வேலூர்: வேலூர் அருகே பைக்கில் தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் சிக்கி 1 கி.மீ தூரம் இழுத்து சென்று பரிதாபமாக பெயின்டர் பலியானார். வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பென்னாத்தூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (49), பெயின்டர். இவர் நேற்று காலை பைக்கில் கண்ணமங்கலம்-கணியம்பாடி இடையே கனிகனியான் என்ற இடத்தில் சுரங்கபாதையில் செல்லாமல், அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ரயில் பாஸ்கரன் பைக் மீது மோதியுள்ளது. இதில் பைக்குடன் பாஸ்கரன் ரயில் சக்கரத்தில் சிக்கினார். பின்னர் பாஸ்கரனின் உடல் ரயிலில் சிக்கியிருப்பதை கண்ட இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். அதற்குள் வாலிபர் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு பலியானார். தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் பாஸ்கரனின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement