வேலூர்: சென்னையில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு முகுந்தராயபுரம் நிலையத்தை ரயில் நெருங்கிய போது, ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை திடீரென கடந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் சிக்கினார். அவர் ரயில் இன்ஜின் முகப்பில் சிக்கி பலத்த காயமடைந்து இறந்தார். வாலிபரின் சடலம் ரயில் இன்ஜினில் சிக்கி காட்பாடி ரயில் நிலையம் வரை 28 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்டது. இதை பார்த்து பயணிகள் அலறியதை தொடர்ந்து உடலை கைப்பற்றி இறந்தவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Advertisement