இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 இடங்களுக்கு ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. டெக்னீசியன் கிரேடு-1 (சிக்னல்): 183 இடங்கள். சம்பளம்: ரூ.29,200. வயது: 18 முதல் 36க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்பர்மேஷன் டெக்னாலஜி/ இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் கிரேடு- III: 6055 இடங்கள். சம்பளம்: ரூ.19,900. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.7.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி விண்ணப்பதாரர்களுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. பொது/ஓபிசி யினருக்கு ரூ.500/-. பொருளாதார பிற்பட்டோர்/எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ முன்னாள் ராணுவத்தினர்/ சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு மைய விவரங்கள், எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
www.indianrailways.gov.in அல்லது www.rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.07.2025.