Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாட்டி வைத்தியம்

*ஆவாரை

இலை, பூ, விதை, பட்டை, வேர் இவைகளை இடித்து கசாயம் போட்டுக் குடித்தால் நீரிழிவு குணமாகும். ஆறாத புண்களும் ஆறும். உடல் வெப்பம் தணியும். அம்மை நோய் குணமாகும். கசாயம் குடித்தால் வாய்ப்புண், வாய்நாற்றம் மாறும்.

*ஊமத்தை

ஊமத்தை இலையை இடித்து பிழிந்த சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தைலம் செய்து பயன்படுத்தினால் ஆறாத புண்கள், புரைகள், ரணங்கள் தீரும். சீழ்வடிதல், ஆஸ்துமாவிற்கு நல்ல பலன் உண்டு.

*எருக்கு

இதன் பாலை முள் குத்திய இடத்தில் தொட்டு வைத்தால் முள் தானாகவே வெளியே வரும். இதன் சாறு, வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி மருந்துகளில் சேர்க்கப்படுவது உண்டு. இந்த இலைச்சாறு 2-5 சொட்டுக்கள் குடித்தால் தேள், பாம்பு கடி விஷம் இறங்கி விடும்.

*கண்டங்கத்திரி

இதை கஷாயம் செய்து குடித்தால் இருமல், கோழை, ஆஸ்துமா போன்ற நோய்கள் கட்டுப்படுத்தும். பாத எரிச்சல் குணமாகும். கொப்புளங்கள் மறையும். சிறுநீர் நன்றாக பிரியும். உடல் வீக்கம் குறையும். பற்களில் உள்ள கிருமிகள் மறையும்.

*கற்பூரவள்ளி

இலைகளில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் வாட்டி, சாறு பிழிந்து குடித்தால் நாட்பட்ட மந்தம், கோழை, இருமல் இவைகள் குணம் அடைகின்றது. சாற்றுடன் கற்கண்டு சேர்த்தும் குடிக்கலாம். பாம்பு கடிக்கும் இதன் சாறு நல்ல மருந்தாக அமையும்.

*கறிவேப்பிலை

இதனை குழம்பு மற்றும் தாளிக்க பயன்படுத்தலாம். சீரகத்துடன் கறிவேப்பிலை சேர்த்து அரைத்து மோரில் கலக்கி குடித்தால் செரிமானம் சரியாகும். கொழுப்பு சத்து குறையும். இரத்த

அழுத்தம் குறையும்.

*கீழாநெல்லி

இதனை அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து குடித்தால் மஞ்சள் காமாலை தீரும். உலர வைத்துப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் சரியாகும். தைலமாக்கி தலைவலிக்கு தடவலாம். சருமநோய்கள் வராது.

- விமலா சடையப்பன்,

திண்டுக்கல்.