சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. 14.2 கிலோ...
சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது.
14.2 கிலோ வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை இம்மாதமும் மாற்றமின்றி சென்னையில் ரூ.868.50க்கு விற்கப்படுகிறது. அதேவேளையில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.33 முதல் ரூ.34.50 வரை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,823.50 என இருந்தநிலையில், ரூ.34.50 குறைந்து ரூ.1,789 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லியில் ரூ.33.50 குறைந்து ரூ.1,631.50 ஆகவும், மும்பையில் ரூ.34 குறைந்து ரூ.1,582.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.34.50 குறைந்து ரூ.1,734.50 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.