நியூயார்க்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதையடுத்து இருநாட்டு வர்த்தக உறவு பாதிக்கப்பட்டது. இருதரப்பிலும் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்ததால் தற்போது அது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதுபற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியும், அமெரிக்க தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனருமான கெவின் ஹாசெட் கூறுகையில்,’ இந்தியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும். இதுதொடர்பாக நான் இந்திய தூதரிடம் பேசினேன். இது ஒரு சிக்கலான சூழ்நிலை என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர்கள் நல்ல நண்பர்கள், விரைவில் அதை சரிசெய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.


