திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் பழயங்காடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபர் குடிபோதையில் படுத்து கிடந்தார். அவரை அகற்ற சென்ற ஊழியர்களை கல் வீசி தாக்க முயன்றார். போலீசார் மீதும் கல் வீசினார். இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய 2 பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் போலீசார் வாலிபரை அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். விசாரணையில் பழயங்காடி பகுதியை சேர்ந்த பாதுஷா (33) என்பது தெரியவந்தது.
+
Advertisement