பொள்ளாச்சி: பொள்ளாச்சி-வால்பாறை சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் கோவைரோடு, பாலக்காடுரோடு, பல்லடம்ரோடு, உடுமலைரோடு, மீன்கரைரோடு, வால்பாறைரோடு, நடுப்புணிரோடு உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதில் முக்கிய நெடுஞ்சாலையில் ஒன்றான வால்பாறை ரோட்டில், பகல் மற்றும் இரவு நேரத்திலும் வாகன போக்குவரத்து அடிக்கடி உள்ளது. இந்த ரோட்டிலிருந்து பல்வேறு கிராமங்கள் பிரிந்து சென்றதாலும் அந்த வழியாக சுற்றுலா வாகனங்களே அதிகளவு சென்று வருகிறது. சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வரை, பொள்ளாச்சி நகரில் துவங்கி ஆழியார் வரையிலும் சுமார் 23 கிமீ தூரத்தில் வால்பாறைரோட்டின் பெரும் பகுதி குறுகாலாக இருந்தது.
சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பிரதான சாலை என்பதால், வாகனங்கள் ஒன்றுகொண்டு போட்டி போட்டு முந்தி செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டதுடன், உயிரிழப்பும் அதிகமானது.
இதையடுத்து இந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சுமார் 5 ஆண்டுக்கு முன்பிருந்து வால்பாறை சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. சில பகுதிகளில் இடையூறாக இருந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
அண்மையில் ஆழியார் சோதனை சாவடியிலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதிகளில் வாகனங்கள் விரைந்து சென்று வருகிறது. இருப்பினம், வால்பாறை மற்றும் ஆழியார், நாமூ சுங்கம் வழியாக ஆனைமலை, உடுமலை செல்லும் பிரதான சாலை என்பதால், வருங்காலங்களில் இப்பகுதியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்புள்ளது.எனவே வால்பாறை ரோட்டில் அகலப்படுத்தப்படாத பகுதியையும் அகலப்படுத்தி வாகனங்கள் இடையூறு இல்லாமல் விரைந்து சென்று வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரோட்டின் அகலத்தைபொறுத்து 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் சுற்றுலா வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதியில் ஒன்றான வால்பாறை ரோட்டில் நா.மூ.சுங்கத்திலிருந்து ஆழியார் வரையிலும், அகலப்படுத்தாத பகுதிகளை கணக்கெடுத்து, அப்பகுதியில் அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தற்போது 7 மீட்டர் அகலத்தில் உள்ள ரோட்டில் இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலப்படுத்தி மொத்தம் 10 மீட்டர் அகலத்தில் இருவழித்தடன் ரோட்டின் ஓரம் நடந்து செல்லும் அளவிற்கு பாதை ஏற்படுத்தும் பணி துவங்கப்பட்டது.அதிலும், மேடு பள்ளமான சில இடங்களில் அதற்கேற்ப சமப்படுத்தி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறைரோட்டை முழுமையாக அகலப்படுத்தி பயன்பாட்டிற்கு வரும்போது, வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் எந்தவித சிமமின்றி விரைந்து செல்வதுடன், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதன சம்பவம் நடைபெறுவது கட்டுப்படுத்தப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


