வாஷிங்டன்: உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலும் முதல் இடத்தில் அமெரிக்காவும், 6வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பை வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியாக உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு எது? ஒவ்வொரு நாட்டிடம் எவ்வளவு தங்கம் உள்ளது? என்பது இந்த பதிவில் பார்ப்போம்.
அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் டாப் 10 லிஸ்ட்:
*உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலும் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாடு சுமார் 8133.46 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில ஜெர்மனி உள்ளது. அந்நாடு சுமார் 3350.25 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி நாடு 3ம் இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார் 2451.84 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் நாடு 4ம் இடத்தில் உள்ளது. அந்நாடு சுமார் 2437 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாம்.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5ம் இடத்தில் சீனா உள்ளது. அந்நாடு சுமார் 2298.53 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாம்.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6ம் இடத்தில் இந்தியா உள்ளது. நம் நாட்டிடம் சுமார் 879.98 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. சுமார் 845.97 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் துருக்கி உள்ளது. அந்நாடு சுமார் 634.76 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
*அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் போலந்து உள்ளது. சுமார் 515.47 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
*இறுதியாக, அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. சுமார் 310.29 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
