சென்னை: சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில் தனது வேலை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, ‘‘சில நேரங்களில் நாம் நிறைய திட்டங்களை தீட்டுகிறோம், ஆனால் அது நடக்காமல் போகிறது. நான் தண்ணீரைப் போல, காலத்தின் ஓட்டத்தில் செல்கிறேன். வேலையிலும் அப்படித்தான்.
முன்பு, நான் ஒரு வெறி பிடித்தவன் போல, இரவும் பகலும் வேலை செய்தேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் தனிப்பட்ட வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போது எனது வேலையை பெருமளவு குறைத்துள்ளேன். இதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும் முடிகிறது. அதேநேரத்தில் எனது வேலையை எளிதாக செய்ய முடிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.