நாளை மாலை அல்லது இரவு தீவிர புயலாகவே மோன்தா கரையை கடக்கும்: வானிலை மைய தென்மண்டலத் தலைவர் அமுதா பேட்டி
சென்னை: நாளை மாலை அல்லது இரவு தீவிர புயலாகவே மோன்தா கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா பேட்டி பேட்டியளித்துள்ளார். நாளை மாலை அல்லது இரவு மோன்தா புயல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு 480 கி.மீ. தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். இன்றும் நாளையும் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும். அக்.1 முதல் இன்று வரை இயல்பில் இருந்து 57% வடகிழக்கு பருவமழை கூடுதலாக பதிவாகி உள்ளது என தெரிவித்தார்.
