நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்: ககன்தீப் சிங் பேடி!!
சென்னை: நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்ற உள்ளார் என தமிழ்நாடு அரசின் ஊடக செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும் கிராம சபை கூட்டங்கள் குறித்து ககன்தீப் சிங் பேடி பேட்டி அளித்தார். தமிழ்நாட்டில் நாளை 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.10 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் காணொலி வாயிலாக பேசுகிறார். குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். குப்பை அகற்றுதல், சாலை வசதி, பேருந்து வசதி குறித்த குறைகள் கேட்டறியப்படும் என அவர் தெரிவித்தார்.