Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சுங்கவரித்துறை அலுவலகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலை

சுங்கவரித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. டிரேட்ஸ்மேன்: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1).

வயது: 25க்குள். சம்பளம்: ரூ.19,900- 63,200. தகுதி: மெக்கானிக்/டீசல்/பிட்டர்/ டர்னர்/வெல்டர்/எலக்ட்ரீசியன்/இன்ஸ்ட்ரூமென்டல்/கார்பென்டரி/ ஆட்டோமொபைல் ஆகிய டிரேடுகளில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. சீ மேன்: 11 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-3, எஸ்டி-2). வயது: 18லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சீ மேன் (Seaman) பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. கிரீசர்: 4 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட கிரீசர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. சீனியர் ஸ்டோர் கீப்பர்: 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 8 வருட ஸ்டோர் கீப்பர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் பெட் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://eenexcisekochi.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2025.