Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுங்க வரித்துறையில் வேலை

பணி: கேன்டீன் அட்டென்டெண்ட்: 22 இடங்கள் (பொது-8, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-2).

சம்பளம்: ரூ.18,000- 56,900. வயது: 18 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் நியூமரிக்கல் அப்டிடியூட், பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் பொது சுகாதாரம், உணவு, ஊட்டச்சத்து தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.

https://www.mumbaicustomszone1.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: (16.11.2025.)