Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இருபது ரூபாய் டோக்கன் இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக திரும்பியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஸ்டேஷனுக்கு டீ, காபி வாங்கி கொடுக்க வந்தவரு காக்கியாகவே மாறி வரவு- செலவு வரைக்கும் பார்த்து பங்கு பிரிச்சு கொடுக்குற அளவுக்கு வந்துட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி காக்கிகள் ஸ்டேஷனுக்கு உட்பட்ட சர்க்கிள் ஸ்டேஷனாக சிட்டிக்குள்ளார, வி என்று தொடங்கி பட்டுன்னு முடியுற காக்கிகள் ஸ்டேஷன் இருக்குது.. இந்த காக்கிகள் ஸ்டேஷன்ல 10 வருஷத்துக்கு முன்னாடி, பெயர்ல துரை வெச்சிருக்குற ஒருத்தரு டீ, காபி வாங்கி கொடுக்குறதுக்கு வந்து சேர்ந்தாராம்..

இப்ப முழு காக்கியாகவே மாறிட்டாராம்.. எந்த பிரச்னைன்னு ஸ்டேஷனுக்கு போனாலும் இவர் தான் பேசி, சம்திங் வாங்கி காக்கிகளுக்கு கொடுக்குறாராம்.. இப்படியான தொடர்புல இவரு காக்கிகள் மட்டும் இருக்கற வாட்ஸ்அப்ல இவரும் ஒரு மெம்பராகிட்டாராம்.. ஸ்டேஷன்ல எந்த ரிஜிஸ்டர் எங்க இருக்குதுன்ற வரைக்கும் இவருக்கு அத்துபடியாம்.. நாளைக்கு யாரு எங்க டியூட்டி என்பது வரைக்கும் தெரியுமாம்.. இதை பயன்படுத்திக்கிட்டு, ஐயா சொன்னாரு, ஐயா சொன்னாருன்னு சொல்லி, சொல்லியே வரவு- செலவு வரைக்கும் பார்க்குறாராம்..

இந்த வரவு காக்கிகளுக்கும் சரியாக போய் சேருதாம்.. இதனால சர்க்கிளுக்கு வர்ற ஸ்டார் காக்கிகளும் கண்டுக்குறதே இல்லையாம்.. அதோட மணல் கடத்தலுக்கும் இவர் தான் ரூட் போட்டு கொடுக்குறாராம்.. இப்படி அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்குறாராம்.. ஸ்டேஷன்ல நடப்பது என்ன என்று மாவட்ட உயர் காக்கிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கணும்னு காக்கிகள் டிபார்ட்மெண்ட்ல இருந்தே புகார்கள் வர தொடங்கியிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மக்கள் மீதான திடீர் பாசப் போராட்டத்தால் நகைப்புக்குள்ளாகி இருக்காங்களாமே கடல் ஊர்வாசிகள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடல் ஊர் பெயர் கொண்ட மாவட்டத்தில் மாநகராட்சி இருக்கு.. இங்குள்ள மாமன்ற உறுப்பினர்களில் இலை, மாம்பழ பிரதிநிதிகள் இருவர் திடீரென தேசியக் கொடியை கையில் ஏந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனராம்.. பணிகள் சரியாக நடக்கல என்பதை காரணமாக வைத்து நடத்திய மக்கள் மீதான திடீர் பாசப் போராட்டம் குறித்து கேள்விப்பட்ட மலராத கட்சியின் மாமன்ற பிரதிநிதியும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டாராம்..

எங்கள் பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் விட்டும், அதிகாரிகள் ஏரியாவை கவனிக்கல என பேச்சுவார்த்தைக்கு வந்த ஆணையரிடம் முறையிட்டார்களாம்.. அவரும் போங்க... போங்க... வருவாங்கப்பா... என கூற சட்டென முடித்து கிளம்பி விட்டாராம்.. மூன்று கட்சி பிரதிநிதிகள் நடத்திய பாசப் போராட்டத்தை கேள்விப்பட்ட சக உறுப்பினர்களும், உள்ளூர்வாசிகளும் நகைத்தபடி செல்கிறார்களாம்..

மாவட்ட நிர்வாகமோ உஷாராக முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... என்ற காமெடி ஒலிகளை கடல்ஊர் வாசிகள் நகைப்புக்குள்ளாக்கி வருவதை பரவலாக கேட்க முடிகிறதாம்.. என்றார் விக்கியானந்தா. ‘‘கோபிக்காரரின் அல்வா மாவட்டத்து விசிட் இலை கட்சியினர் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சேலம்காரருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கோபிக்காரர் இலை கட்சி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.. அடுத்து பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தியில் தேனிக்காரர், குக்கர்காரருடன் கை கோர்த்ததால் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். எனினும் மனம் தளராத கோபியார் நேற்று அல்வா மாவட்டத்துக்கு திடீரென ‘விசிட்’ அடித்தார்.. வஉசி நினைவு தினத்தை முன்னிட்டு அல்வா நகரில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாராம்..

அவரது வருகை, யார் யாரை சந்திக்கிறார், அவருடன் இலை கட்சியினர் யாரும் வருகிறார்களா என்பதை சேலம்காரர் ஆள் போட்டு கண்காணித்தாராம்.. கோபிக்காரரின் ஒவ்வொரு அசைவையும் இலை கட்சியினர் சேலம்காரருக்கு உடனுக்குடன் பரிமாறிக் கொண்டிருந்தனராம்.. அதுமட்டுமல்லாது பேட்டியை தவிர்த்த கோபிக்காரரிடம் கோவை வரும் பிரதமரை சந்திப்பீர்களா என்றதற்கு ‘சஸ்பென்ஸ்’ என்றும் கூறிச் சென்றுள்ளார்.. இந்த சஸ்பென்ஸ் தான் இலை கட்சியினரை யோசிக்க வைத்துள்ளதாம்.. பசும்பொன், நெல்லை என கோபிக்காரரின் ரூட் செல்கிறதே..,

ஏற்கனவே மம்மி இருந்த போது அவரது அரசியல் சுற்றுப்பயணம் முழுவதற்கும் ரூட் போட்டவர் இவர் தான். அப்படி தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு முழுவதையும் அறிந்தவர் தற்போது எந்த ரூட்டில் பயணிக்கிறார் என இலை கட்சியினர் புதிய குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த டோக்கன் விவகாரம் நிர்வாகிகளிடையே பீதியை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த மாவட்டத்துல 11 சட்டமன்ற தொகுதி இருக்குதாம்..

இதில் புறநகரில் மட்டும் எட்டு தொகுதி வருதாம்.. ஒவ்வொரு தொகுதிக்கும் பத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என சொல்லிக்கிட்டிருக்காங்களாம்.. இதற்காக பல ஆண்டுகளாகவே பல லட்சங்களை செலவு செஞ்சியிருப்பதாக சொல்றாங்க.. தண்ணீரா அள்ளி விட்டதால் பலரும் கடனுக்குள் விழுந்து கிடப்பதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க.. ஆனால் வரும்தேர்தலில் இலைக்கட்சிக்காரங்க ஓட்டுகேட்க செல்வதில் பெரும் சிக்கலில் சிக்கப்போறதாக ரத்தத்தின் ரத்தங்கள் பேசுறாங்க..

பல ஆண்டுகளுக்கு முன்பு குக்கர்கட்சிக்காரரு ஆர்.கே.நகரில் களம் இறங்கினாரு.. அப்போது தற்போதைய இலைக்கட்சி தலைவர் தொப்பிய போட்டுக்கிட்டு தெருத்தெருவாக சென்று களமாடினாரு.. அந்நேரத்தில் புதியதாக இருபது ரூபாய் நோட்டை டோக்கனா கொடுத்து புதிய சரித்திரம் படைச்சாங்களாம்.. அவ்வாறு கொடுத்த டோக்கனை என்ன செய்வது என்றே வாக்காளர்களுக்கு தெரியாம போச்சுதாம்.. அதே பார்முலாவை கடந்த தேர்தலில் மாங்கனி மாவட்டத்தில் வெறும் டோக்கனாக மட்டும் கொடுத்து வேலையை தீவிரப்படுத்தினாங்களாம்..

இவ்வாறு டோக்கனால் வெற்றிக்கனியை ருசித்த நேரத்துல நன்றி சொல்லகூட தொகுதி பக்கம் போகாம இருந்துட்டாங்களாம்.. ஆனால் அவர்கள் கொடுத்த டோக்கனை மட்டும் மக்கள் பத்திரமாக இன்னும் வச்சியிருப்பதாக இலைக்கட்சிக்காரங்களே சொல்றாங்க.. அதோடு இலைக்கட்சி தலைவரிடம் இருந்து டோக்கன் வந்ததினால் பெரிய பொருளா இருக்குமோன்னு நிர்வாகிகளும் பெருமளவிலான டோக்கனை பதுக்கிக்கிட்டாங்களாம்..

ஆனால் அதை யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற முகவரியை கூட யாரும் சொல்லலையாம்.. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய டோக்கனை மக்கள் இன்னும் பத்திரமா வச்சியிருக்காங்களாம்.. அதை வைத்தே ஓட்டு கேட்க வரும் இலைக்கட்சிக்காரங்களை துரத்தபோவதாக இலைக்கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க.. இதனால இப்போதே நிர்வாகிகளிடையே பீதி ஏற்பட்டிருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.