டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதை நேற்று முறைப்படி வங்கதேச தேர்தல் கமிஷனர் நஸீர் உதீன் அறிவித்தார். அதன்படி வங்கதேசத்தில் பிப்.12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
அன்று காலை 7:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 300 தொகுதிகளை கொண்ட வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. டிச. 29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு மீதான பரிசீலனை டிச.30 முதல் 2026 ஜன.4 வரை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஜன.20ம் தேதி கடைசி நாள். வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் ஜனவரி 21 அன்று வெளியிடப்படும். தேர்தல் பிரச்சாரங்கள் ஜனவரி 22 அன்று தொடங்கி பிப்ரவரி 10 காலை 7:30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


