Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை; நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சி. திருவள்ளூரில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை:

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூரில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு:

சென்னையில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

07.08.2025 முதல் 11.08.2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

07.08.2025 முதல் 11.08.2025 வரை: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

07.08.2025: மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

08.08.2025: மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.08.2025: மத்தியமேற்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10.08.2025: மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

11.08.2025: தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.