சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துனர் பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அரசு உதவி வழக்கு நடத்துனர் (கிரேடு 2) பதவியில் காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு (முதன்மை தேர்வு) கடந்த ஜூலை 26ம் தேதி முதல் ஜூலை 30ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. இந்த நிலையில் அரசு உதவி வழக்கு நடத்துனர் தேர்வில், பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வுக்கு தற்காலிமாக அனுமதிக்கப்பட்ட 103 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையம் வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
+
Advertisement


