சென்னை : அரசு துறைகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடங்கியது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வினை தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 13.89 லட்சம் பேர் எழுதுகின்றனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3,935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
+
Advertisement