சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,829 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
+
Advertisement
