Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எம்ஜிஆர் திரைப்படம் பயிற்சி நிறுவன படப்பிடிப்பு தளத்தை திரைப்பட துறை, சின்னத்திரையினர் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை இணைந்த குளிர்சாதன வசதியுடன் சுமார் 17,517 சதுர அடியில் உள்ள படப்பிடிப்புத்தளம் திரைப்படத்துறையினருக்கு பயனளிக்கும். இங்கு படப்பிடிப்புக்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, படப்பிடிப்பு தளம் (குளிர்சாதன வசதியுடன்) ரூ.60,000 (12 மணி நேரம்), படப்பிடிப்புத்தளம் (குளிர்சாதன வசதியில்லாமல்) ரூ.40,000, செட் ஒர்க்ஸ் மற்றும் செட் ஒர்க்ஸ் பிரிப்பதற்கும் (குளிர்சாதன வசதி இல்லாமல்) ரூ.35,000, ஒப்பனை அறை (குளிர்சாதன வசதியுடன்) ரூ.7,000, ஒப்பனை அறை (குளிர்சாதன வசதி இல்லாமல்) ரூ.4,000, சிறு அறை (குளிர்சாதன வசதி இல்லாமல்) ரூ.25,000, சிறு அறை நடைக்கூடம் வராண்டா ரூ.25,000, காத்திருப்பு கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.30,000, துப்புரவு கட்டணம் 6,000 வசூலிக்கப்படும். இந்த கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி கூடுதலாக வசூலிக்கப்படும்.

இந்த வளாகத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்கான அனுமதி, தலைமை செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனரிடம் பெறப்பட வேண்டும். படப்பிடிப்பு கட்டணங்களை தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் முதல்வர் வசூலிப்பார். குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்திற்கான முன்வைப்பு தொகை ரூ.20,000 வசூலிக்கப்படும். அட்டவணையின்படி, ஒவ்வொரு கால்ஷீட்டுக்கும் 12 மணிநேரம் என படப்பிடிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்த விரும்பும் திரைப்பட துறையினர், சின்னத்திரை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோர் முன்அனுமதி பெற்று, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி, உரிய அனுமதியுடன் இந்த வசதிகளை பயன்படுத்தலாம்.