திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு!!
திருவாரூர் : திருவாரூரில் ஆக்கிரமிப்பில் இருந்த கபிலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது. கபிலேஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான 6,000 சதுர அடி நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.