திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் திமுக கோட்டையாக திகழ்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடுத்த 8 மாதங்கள் மிக மிக முக்கியம் என திருவண்ணாமலை திமுகவினர் ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி உரையாற்றினார். மேலும் "பூத் பொறுப்பு என்பது சாதாரண பொறுப்பு அல்ல. நமது ஆட்சியை திராவிட மாடல் அரசு என பெருமையாக சொல்கிறோம். திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை ஒட்டு மொத்த இந்தியாவே திரும்பி பார்க்கிறது. 1.15 கோடி மகளிர் 22 மாதங்களாக மாதந்தோறும் உரிமைத் தொகை வாங்கி வருகின்றனர். விடுப்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் ஜூலை 15ல் வழங்கப்படுகிறது" என துணை முதல்வர் பேசினார்.
Advertisement