டெல்லி: இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு முதல்முறையாக வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரிகள் நாளை டெல்லி வர உள்ளனர். ஒன்றிய வர்த்தக அமைச்சக சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே ஆக.25ல் நடக்க இருந்த வர்த்தக பேச்சு, அமெரிக்கா 50% வரி விதித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement