சென்னை: திருவண்ணாமலையில் 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழு, ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆக்கிரமிப்பு அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை என்றும், ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு தந்த குடிநீர், மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
+
Advertisement