திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வரக்கூடிய சிறுவர்களின் பாதுகாப்புக்காக முகவரி மற்றும் செல்போன் எண்கள் எழுதப்பட்ட டேகுகள் கைகளில் கட்டப்பட்டு வருகிறது. உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் மாலை 6 மணி அளவில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நிலையில், கிரிவல பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் காலை முதல் தற்போது வரை கிரிவலமாக சென்று வருகின்றனர். இதை தொடர்ந்து பெற்றோர்களுடன் சிறுவர்களும் அழைத்து வரப்படுகின்றனர்.
சிறுவர்களின் பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் சார்பில் கைகளில் பெற்றோரின் செல் நம்பர் மற்றும் குழந்தையின் பெயர், வாட்ஸ் அப் எண்கள் எழுதப்பட்ட டேகை குழந்தைகளுக்கு அணிவித்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பாக பெற்றோரிடம் செல்வதற்காகவும், அறிவுறுத்தும் வகையிலும் இந்த பேச் முறையை கோயில் நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்களிலிருந்து வரும் இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

