திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் மலை மீது தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், ஆவினில் நேற்றைய தினம் கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் வருவது வழக்கம். அந்த வகையில், 21ம் தேதியான இன்று நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் தொடங்கியது.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், விழா இனிதே நடக்க வேண்டி பிரார்த்தனையுடன் உற்சவம் தொடங்குகிறது. அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் நவம்பர்.24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. திருவண்ணாமலையில் டிசம்பர்.3ல் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.


