திருப்பூர்: கடந்த நிதியாண்டான 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி ரூ.65 ஆயிரத்து 178 கோடிக்கு நடந்தது. இதில் திருப்பூரில் இருந்து ரூ.39 ஆயிரத்து 618 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. இது இந்தியா அளவில் திருப்பூரின் பங்களிப்பு 61 சதவீதம் ஆகும்.
2023-24ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.55 ஆயிரத்து 798 கோடிக்கு நடந்தது. இதில் திருப்பூரின் பங்களிப்பு ரூ.33 ஆயிரத்து 45 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை என கடந்த 5 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.29 ஆயிரத்து 899 கோடியாகும்.இதில் திருப்பூரின் பங்களிப்பு ரூ.18 ஆயிரத்து 238 கோடியாகும்.
ஏப்ரல் மாதம் ரூ.3 ஆயிரத்து 260 கோடியும், மே மாதம் ரூ.3 ஆயிரத்து 924 கோடியும், ஜூன் மாதம் ரூ.3 ஆயிரத்து 622 கோடியும், ஜூலை மாதம் ரூ.3 ஆயிரத்து 834 கோடியும், ஆகஸ்ட் மாதம் ரூ.3 ஆயிரத்து 598 கோடிக்கும் ஏற்றுமதி நடந்துள்ளது.இது குறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், ‘‘நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் 61 சதவீத பங்களிப்பை வழங்கி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது’’ என்றனர்.
 
  
  
  
   
