திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் பெற, 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்படும். இதில் பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் வெளியிடும்போது முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் டோக்கன்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
