திருமலை: திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி மோசடி செய்த ரவிக்குமார் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ‘ நான் பெரிய ஜீயர் மடத்தில் குமஸ்தாவாக பணிபுரிந்து கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பரக்காமணியில் இருந்து திருட்டில் ஈடுபட்டு பிடிப்பட்டேன். எனது தவறை உணர்ந்து நான் கேபில் தொழிலும், ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து சம்பாதித்த மொத்த சொத்தில் 90 சதவீதம் தேவஸ்தானத்திற்கு எனது குடும்பத்தினர் சம்மத்தத்துடன் எழுதி கொடுத்தேன். செய்யக்கூடாத தவறை செய்ததை உணர்ந்து நான் முழு மனதுடன் சுவாமிக்கு எழுதி கொடுத்தேன் நான் மிகப்பெரிய பாவம் செய்ததை நினைத்தும், எனது மனைவி மற்றும் பிள்ளைகள் படும் துயரத்தை நினைத்து நான் கவலைப்படாத நாளே இல்லை. உண்மைக்கு புறம்பாக திரித்து பேசுவதை நிறுத்துங்கள்’ என கண்ணீருடன் வீடியோவில் கூறியுள்ளார்.
+
Advertisement


