திருமலை: ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியகுமார் பெயரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்திற்கு போலியான கடிதங்கள் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தது. இதுதொடர்பாக விஜயவாடா நகர காவல் ஆணையரிடம் அமைச்சர் உதவியாளர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த சில நாட்களாக அமைச்சரின் பெயரில் போலியான கடிதங்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெயரில் அளிக்கப்படும் சிபாரிசு கடிதங்கள் நேரடியாக பெற வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


