திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பௌர்ணமியை முன்னிட்டு கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல 300 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அலைமோதும் கூட்டத்தால் பக்தர்கலுக்கு ரூம்கள் கிடைக்காமலும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
அதேபோல் இலவச தரிசனத்தின் மட்டும் பக்தர்களுக்கு மட்டுமே லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 63,000 பேர் சாமி தரிசனம் செய்ததாகவும் உண்டியல் காணிக்கையாக 4கோடி 54 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கை பக்தர்கள் செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. தற்போது இலவச தரிசனத்திற்கு மட்டும் 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது .