திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ஏ.ஐ. இயந்திரங்களுடன் அதிநவீன அன்னபிரசாத மையம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த 9ம் தேதி சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆலோசனையின்படி, திருமலையில் ரூ.100 கோடியில் புதிய அதிநவீன வசதியுடன் கூடிய அன்னப்பிரசாத மையம் ஏ.ஐ. இயந்திரங்களுடன் அமைக்க முடிவு செய்திருப்பதாக முகேஷ்அம்பானிக்கு கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தார். திருமலையில் கட்டப்பட உள்ள அன்னபிரசாத மையத்தில் 2 லட்சம் பக்தர்கள் சாப்பிடும் வகையில் உரிய வசதிகளுடன் கட்டப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
