திருப்பதி:திருப்பதி ரயில் நிலையத்தில் லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த 2 ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தண்டவாளங்களை மாற்றும்போது ராயலசீமா - சீரடி எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து மீதமுள்ள ரயில் பெட்டிகளை கழற்றி அப்புறப்படுத்தினர். ரயில் பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித சேதமும் பாதிப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement