திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதங்கள் மற்றும் பூஜைகளுக்காக வாங்கப்பட்ட சப்ளை செய்யப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ இணை இயக்குனர் வீரேஷ் பிரபு தலைமையில், சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஏஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்புடைய தேவஸ்தான பொது மேலாளராக (கொள்முதல்) பணியாற்றி வந்த ஆர்.எஸ்.எஸ்.வி.ஆர். சுப்ரமணியம் என்பவரை, திருப்பதி என்.ஜி.ஓ காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து எஸ்.ஐ.டி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
+
Advertisement

