Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாள்: அனுமந்த வாகனத்தில் மலையப்ப சாமி வீதியுலா

திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று பக்தர்களின் கோவிந்தா முழக்கத்திற்கு மத்தியில் அனுமந்த வாகனத்தில் மலையப்பர் சாமி வீதியுலா வருகிறார். மலையன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களிலும் சுவாமி விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருட சேவை தொடங்கி சுமார் 6 மணி நேரம் நான்கு மணி மாட வீதிகளில் சுவாமி வீதி விழா நடைபெற்றது. இதில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்த நிலையில், பிரம்மோற்சவத்தின் ஆறாவது நாளான இன்று காலை திரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமனை வாகனமாக கொண்டு கோதண்ட ராமராக வீதியுலாவானது நடைபெற்றது.

இந்த வீதியுலாவின் இருந்து சுமார் 18 மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தினுடைய கலை, பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இந்த வீதிவிழாவில் கலைநிகழ்ச்சியானது மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாலை ஐந்து மணிக்கு 32 அடி உயரத்திலுள்ள தங்க ரதத்தில் வந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெண்கள் மட்டுமே வரம் பிடித்திருக்க சுவாமி திருவிழாவானது நடைபெற உள்ளது. இன்று இரவு கஜ வாகனத்தில் சுவாமி தீருவிழா நடைபெற உள்ளது.