தென்காசி: திருமலாபுரம் அகழாய்வுகளில் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் ஆதிச்சநல்லூரில் ஒத்தை இரும்பு கால கலாச்சாரத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளன. தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தில் தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை மேற்கொண்ட முதல் கட்ட அகழாய்வுகள். தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் இரும்பு கால கலாச்சாரத்தின் இருப்பு உறுதி செய்வதக உள்ளனர். உத்தேச மதிப்பீடுகளின்படி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையைப் போலவே, இந்த இடம் கி.மு 2,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் அறிவியல் பகுப்பாய்வுகள் மூலம் இதன் சரியான காலம் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டில் தொல்பொருள் அகழாய்வுகளின் முதல் கட்ட அறிக்கையின்படி திருமலாபுரத்தில் உள்ள புதைவிடம் சுமார் 35 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. கிராமத்திலிருந்து வடமேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து உருவாகும் இரண்டு நீரோடைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. மேலும் திருமலாபுரம் அகழாய்வுகளில், கருப்பு, சிவப்பு, வண்ணங்களில், ஒரே மாதிரியான வடிவில் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இங்கும் ஆதிச்சநல்லூரில் உள்ளது போலவே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு கழுத்தை புலி, நரி, மனிதன், மலை முகடு, ஆமை உள்ளிட்டவை வரையப்பட்டுள்ளன.
அம்பு முனைகள், கத்திகள், கோடரிகள், உளிகள் உள்ளிட்ட கருவிகள் அதிகளவில் கிடைத்தன. இதேபோல் திருமலாபுரத்திலும் அதிக அளவில் இரும்பு ஈட்டி, நீளமான வாள், 2 பட்டை பாதாள கரண்டி உள்ளிட்ட இரும்பு கருவிகள் கிடைத்துள்ளன. அத்துடன் திருமலாபுரத்தில், புதிய கற்கால கருவிகளும் கிடைத்துள்ளன. இதனால் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி நதிக்கரை நகரித்துக்கு சமகாலத்தில் திருமலாபுரத்தில் அதே கலாச்சாரத்தை பின்பற்றிய மக்கள் வாழ்ந்து இருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய காலமான புதிய கற்காலத்தில் இருந்தே, அங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
புதிய கற்கலாம், இரும்பு மற்றும் செம்பு பயன்பாட்டு காலம், எழுத்துகள் உருவாவதற்கு முந்தயை குறியீடுகள், ஓவியங்கள் அறிமுகமான வரலாற்று தொடக்க காலத்தில், இங்கு மக்கள் வாழ்ந்திருக்கலாம். திருமலாபுரத்தில், 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 3,500 ஆண்டுகளுக்கு முன் வரை, மக்கள் வாழ்ந்திருக்கலாம். துல்லியமான காலக்கணிப்பை அறிய, மனித எலும்புகள், சடங்கு கலையங்களில் கிடைத்துள்ள உணவு துகள்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவரின் முடிவுகள் வரும்போது, அறிவியல்பூர்வமான தகவல்கள் வெளியாகும்.