திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கோயில் வாசல் பகுதியில் இளம்பெண், சினிமா பாடலுக்கு நடனமாடி தனது சமூக வலைதள இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


