மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட்டை முறைப்படுத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த சண்முகராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சட்டவிரோதமாக டிக்கெட் விற்பனையை தடுக்க அறநிலையத்துறை, போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக டிக்கெட் விற்ப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், கோயிலில் பாதுகாப்புக்கு தேவைப்படும் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தவும் தூத்துக்குடி எஸ்.பி.க்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
+
Advertisement