மதுரை: திருச்செந்தூர் கோயிலில் பிரேக் தரிசனம் செயல்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரி மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் வழங்கும் ஆட்சேபனைகளையும் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. செப்.11 வரை பக்தர்கள் ஆட்சேபனைகளை கூறலாம் என கூறிய நிலையில் முன்கூட்டியே வழக்கு தொடரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்று ராம்குமார் ஆதித்யன் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.
+
Advertisement