தூத்துக்குடி: திருச்செந்தூரில் அக்.27ம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்.26ல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்.27ல் திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், திருச்செந்தூரில் இருந்து ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என அழைக்கப்படுகிறது.
சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு சப்தமி திதியில் நடக்கும் முருகனின் திருக்கல்யாணத்தையும் தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிலர் சஷ்டி வரை மட்டும் விரதம் இருப்பது வழக்கம். திருச்செந்தூரில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது. வரும் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டியின் ஆறாம் நாளில், திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். அப்போது முருகன், சூரபத்மனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி, தனது வாகனமாகவும் கொடியாகவும் ஆக்கிக்கொள்வார். 👉திருக்கல்யாணம்: சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள், முருகனுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்
இந்நிலையில் திருச்செந்தூரில் அக்.27ம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்தை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்.26ல் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அக்.27ல் திருச்செந்தூரில் இருந்து சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.