சின்னார் வனத்தை ஒட்டிய பகுதிகளில் புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் பயணிக்க வனத்துறை எச்சரிக்கை
கேரளா: கேரளா மாநிலம் மூணாறில் இருந்து மறையூர் செல்ல கூடிய சாலையில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.அங்கு சாலையை புலி ஒன்று கடக்கும் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாலையில் சென்ற வாகன ஒட்டி ஒருவர் வாகனத்தில் செல்லும் போது புலி ஆனது காட்டு பகுதியில் இருந்து சாலையை நோக்கி நடந்து வந்து கடந்து செல்ல கூடிய அந்த காட்சிகளை அவர் விடியோவாக பதிவுசெய்து தற்போது இனையத்தில் வைரலாக பரவிவருகிறது.
பொதுவாக மழை காலங்களில் அந்த நீர் நிலைகலை நோக்கி இந்த மாதிரியான வேட்டை விலங்குகள் ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு வந்து இடம் பெயர்ந்து செல்லக்கூடியது உணவுக்காகவும் அதேபோல தண்ணீர் காகவும் செல்லக்கூடிய ஒரு வாய்ப்புஇருக்கிறது. இந்த நிலையில் தான் இந்த சாலையை பயன் படுத்த கூடிய வாகன ஓட்டிகள் வந்து எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
மூணாறில் இருந்து உடுமலை பேட்டைவரை வரக்கூடிய இந்த சாலையானது வனவிளங்குகள் அடிக்கடி கடந்து செல்ல கூடிய ஒரு பாதையாக இருக்க கூடிய காரணத்தினால் இந்த பாதையை பயன்படுத்த கூடிய வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கணும் அறிவுறுத்தியுள்ளனர்.