டெல்லி: தமிழ்நாட்டில் புலிகளை பாதுக்காக்க நடவடிக்கை என்ன? என வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் இயற்கை வனப்பகுதி குறைந்து வருவது குறித்தும் அதை சரிசெய்ய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்தும் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வனப்பகுதி பாதுகாப்பிற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு செய்யப்பட்ட நிதி எவ்வளவு? சிறுத்தை மற்றும் புலிகள் வாழ்விடங்கள் பற்றிய அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றிற்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்கள் பற்றிய விவரங்கள் என்ன?
வனப்பகுதி மற்றும் புலிகள் பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டுள்ளதா? தமிழ்நாட்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (ழிஜிசிகி) புதிய புலிகள் காப்பகங்களை உருவாக்க வைத்துள்ள திட்டம் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார்.