தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலகத்தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.30,000 கோடியில் கப்பல் கட்டும் தளத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் ரூ. 15,000 கோடியில் வணிக ரீதியிலான கப்பல் கட்டும் தளத்தை தூத்துக்குடியில் அமைக்கிறது. மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் ரூ.15,000 கோடியில் மற்றொரு கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது.
இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைப்பதன் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மாபெரும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது வரலாற்று மைல் கல் ஆகும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். புதிதாக தொடங்கப்படும் 2 மெகா திட்டங்களால் கப்பல் கட்டும் தொழிலில் சர்வதேச மையமாக தமிழ்நாடு அமையும் என தெரிவிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியாக திகழ்வதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் கரணம் என கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு கப்பல்துறை முக்கியமானது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளனர்.