Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தூய்மை பணி

*கல்லூரி மாணவிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்றார்

தூத்துக்குடி : தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கல்லூாி மாணவிகளுடன் மேயர் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார். தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்துநகர் கடற்கரையில் கல்லூாி மாணவிகளுடன் இணைந்து மாஸ் கிளினிங் பணியை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்து பங்கேற்றார். அப்போது மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில், ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் ஆரோக்கியம் அவசியமாகிறது.

அதே சமயத்தில் உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டப்பந்தயம் முக்கியம். இந்த மாநகரம் சுகாதாரமான நகரமாக மாறுவதற்கு நெகிழி கேரிபேக் பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என்று மாநகராட்சி நிா்வாகம் சார்பில் எல்லோருக்கும் தொிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தக்கூடாது என்று உங்களது தாய் தந்தையர்களிடம் கூறுவது மட்டுமின்றி நீங்களும் முன் உதாரணமாக இருந்து அதை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூாி முதல்வர் ரூபா, மேன்மையாளர் பாத்திமாலூயிஸ், துணை முதல்வர் மதுரவள்ளி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், கல்லூரி ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.