குலசேகரம்: தூத்துக்குடியில் இருந்து காஸ் சிலிண்டர்கள் ஏற்றி கொண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று இரவு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சுருளக்கோடு அருகே உள்ள வீரப்புலி, வெட்டுத்திருத்தி பகுதியில் செல்லும் போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட டிரைவர் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பக்க டயர் சாலையை விட்டு கீழே இறங்கியுள்ளது. இதில் சாலையோர பகுதி டயர் புதைந்ததால் லாரி அந்த பகுதியில் தலை கீழாக கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்று காலை மீட்பு வாகனம் மூலம் அதில் உள்ள காஸ் சிலிண்டர்களை எடுத்துவிட்டு லாரியை மீட்டனர்.
